தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் திருடிய சிறுவனை போலீசார் கைது செய்தனர்

தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் திருடிய சிறுவனை போலீசார் கைது செய்தனர்

Update: 2021-11-15 13:31 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி வேப்பலோடையை சேர்ந்தவர் பலவேசசெல்வம் (வயது 24). இவர் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு ஆஸ்பத்திரிக்கு சென்றாராம. பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, மோட்டார் சைக்கிள் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஒரு சிறுவன் மோட்டார் சைக்கிளை திருடி சென்று இருப்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அந்த சிறுவனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்