தூத்துக்குடியில் 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்
தூத்துக்குடியில் 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்;
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் ரவுடிகள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க அந்தந்த உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தனிப்படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் தலைமையில், இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, வள்ளிநாயகபுரம் பகுதியில் சென்றவரை வழிமறித்து மிரட்டல் விடுத்ததாக, தூத்துக்குடி அண்ணா நகரைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் கண்ணன் என்ற வள்ளியூரான் கண்ணன் (வயது 36) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் மீது 7 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதே போன்று தாளமுத்துநகர் கோமஸ்புரம் பகுதியில் சென்ற ஒருவரை மிரட்டியதாக, சிலுவைப்பட்டியை சேர்ந்த இருதயராஜா பாண்டியன் மகன் அலெக்ஸ் என்ற அருள்மணி (44) என்பவரை தாளமுத்துநகர் போலீசார் கைது செய்தனர். இவர் மீது 3 வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 2 பேரின் பெயர்களும் ரவுடிகள் பட்டியலில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
-----------