சாலை தடுப்பை அகற்றியதை தட்டிக்கேட்ட போக்குவரத்து பெண் போலீசுடன் வாக்குவாதம்

மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சாலையின் நடுவில் இருந்த தடுப்பை அகற்றிவிட்டு செல்ல முயன்றனர்.போக்குவரத்து பெண் போலீஸ் உமாமகேஸ்வரியுடன் கடுமையாக வாக்குவாதம் செய்த 2 பேரும், அவரை தாக்க முயற்சித்தனர்.

Update: 2021-11-15 13:03 GMT

சென்னை புளியந்தோப்பு போக்குவரத்து போலீசாக வேலை செய்பவர் உமாமகேஸ்வரி. இவர் நேற்று மதியம் ஸ்டாரன்ஸ் சாலை மற்றும் பெரம்பூர் பேரக்ஸ் சாலை சந்திப்பில் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சாலையின் நடுவில் இருந்த தடுப்பை அகற்றிவிட்டு செல்ல முயன்றனர்.

இதனை தட்டிக்கேட்ட போக்குவரத்து பெண் போலீஸ் உமாமகேஸ்வரியுடன் கடுமையாக வாக்குவாதம் செய்த 2 பேரும், அவரை தாக்க முயற்சித்தனர். அங்கு இருந்த சக போலீசார் அவர்களை தடுத்தனர்.

இதுகுறித்து உமாமகேஸ்வரி அளித்த புகாரின்பேரில் புளியந்தோப்பு போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் இது தொடர்பாக பெண் போலீசுடன் வாக்குவாதம் செய்த சதீஷ் மற்றும் பாபு ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்