நிலக்கடலை ரூ.22 லட்சத்திற்கு ஏலம்

நிலக்கடலை ஏலம் ரூ.22 லட்சத்திற்கு;

Update: 2021-11-15 12:13 GMT
சேவூர், 
சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று நிலக்கடலை ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் 760 மூட்டை நிலக்கடலை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. 
அதன்படி குவிண்டால், ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.6,900 முதல் ரூ.7,000 வரையிலும், இரண்டாவது ரக நிலக்கடலை ரூ.6,700 முதல் ரூ.6,850 வரையிலும், மூன்றாவது ரக நிலக்கடலை ரூ.6,000 முதல் ரூ.6,300 வரையிலும் ஏலம் போனது. இதன் மூலம் மொத்தம் ரூ.22 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம் நடைபெற்றது. இதில் 9 வியாபாரிகள், 67 விவசாயிகள் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்