கோடம்பாக்கம் மண்டலத்தில் கொசு ஒழிப்பு பணி தீவிரம்

டெங்கு, மலேரியா போன்ற மழைக்கால நோய்கள் பரவாமல் தடுக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Update: 2021-11-15 08:53 GMT
அதன்படி கோடம்பாக்கம் மண்டலத்தில் கொசு ஒழிப்பு புகை அடிக்கும் வாகனத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் விருகம்பாக்கம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. பிரபாகர் ராஜா, மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்
தீப் சிங் பேடி, தி.மு.க. வர்த்தகர் அணி மாநில செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்