கார்- மோட்டார்சைக்கிள் மோதல்; என்ஜீனியர் பலி ஒருவர் காயம்

கார்- மோட்டார்சைக்கிள் மோதல்; என்ஜீனியர் பலி ஒருவர் காயம்;

Update: 2021-11-15 05:17 GMT
வெண்ணந்தூர்:
வெண்ணந்தூர் அருகே கார், மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் என்ஜீனியர் பலியானார். ஒருவர் படுகாயம் அடைந்தார்.
என்ஜீனியர்
நாமக்கல் அருகே உள்ள களங்காணி பகுதியை சேர்ந்தவர் வரதராஜ். சேலம் மாவட்டம் மல்லூர் நடேசன் நகர் பகுதியை ேசர்ந்தவர் சின்னதுரை மகன் பிரபாகரன் (வயது 27). என்ஜீனியரிங் முடித்துள்ள இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். பிரபாகரனுக்கு கடந்த 3 மாதத்துக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. 
இந்தநிலையில் வரதராஜ் நேற்று முன்தினம் சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தாழம்பள்ளம் பஸ் நிறுத்தம் அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது பிரபாகரன் வேலை நிமித்தமாக நாமக்கல் சென்று விட்டு மோட்டார்சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார். 
சிகிச்சை
அப்போது பிரபாகரன் காரை முந்தி செல்ல முயன்றபோது எதிர்பாராதவிதமாக காரும், மோட்டார்சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த பிரபாகரன் உயிருக்கு போராடினார். 
காரில் வந்த வரதராஜ் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அந்த வழியாக வந்தவர்கள் படுகாயம் அடைந்த பிரபாகரனை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வரதராஜ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
விசாரணை
இந்தநிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிரபாகரன் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து பிரபாகரன் தந்தை வெண்ணந்தூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

மேலும் செய்திகள்