கிருஷ்ணகிரியில் துணிகரம் தனியார் நிறுவன பெண் ஊழியரிடம் 4½ பவுன் தங்க சங்கிலி பறிப்பு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

கிருஷ்ணகிரியில் தனியார் நிறுவன பெண் ஊழியரிடம் 4½ பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2021-11-15 05:17 GMT
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் தனியார் நிறுவன பெண் ஊழியரிடம் 4½ பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பெண் ஊழியர் 
கிருஷ்ணகிரி மேல் சோமார்பேட்டை கணபதி நகரை சேர்ந்தவர் கமல். இவரது மனைவி கீதா (வயது 27). இவர் சென்னையில் சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். கிருஷ்ணகிரிக்கு வந்திருந்த அவர், ஸ்கூட்டியில் கிருஷ்ணகிரி சோமார்பேட்டை டி.கே.சாமி மெட்ரிக் பள்ளி அருகில் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தார். அவருடன் அவரது தாயார் கண்மணியும் சென்றார். 
அப்போது 26 முதல் 30 வயது மதிக்கத்தக்க 2 நபர்கள் மோட்டார்சைக்கிளில் அவர்களை பின் தொடர்ந்து வந்தனர். அந்த மர்ம நபர்கள் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கீதா அணிந்திருந்த 4½ பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டனர். 
வலைவீச்சு
இதனால் அதிர்ச்சி அடைந்த கீதா இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த துணிகர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்