மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி

மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் வாலிபர் உயிரிழந்தார்.

Update: 2021-11-14 21:18 GMT
வையம்பட்டி:
திருச்சி மாவட்டம், வையம்பட்டியை அடுத்த குரும்பப்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக்(வயது 28). இவர் நேற்று மணப்பாறையில் இருந்து குரும்பப்பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார். பழையகோட்டை பிரிவு சாலை அருகே சென்றபோது எதிரே வையம்பட்டியில் இருந்து மணப்பாறை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும், கார்த்திக் சென்ற மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டன. இதில் கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்தார். 

மேலும் செய்திகள்