திருச்சி:
திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் 54-வது தேசிய நூலக வார விழாவையொட்டி நேற்று முதல் வருகிற 20-ந்தேதி வரை ஒரு வார காலத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதில் முதல் நாள் நிகழ்ச்சியாக நேற்று மாவட்ட மைய நூலகத்தில், 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ‘தேசிய தலைவர்கள்’ பற்றிய ஓவியம் வரைதல் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களது பெற்றோர்களுடன் வந்து ஆர்வமுடன் கலந்து கொண்டனர். போட்டியை வாசகர் வட்ட தலைவர் கோவிந்தசாமி தொடங்கி வைத்தார். மாவட்ட நூலக அலுவலர் சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.