நடிகர் சூர்யாவை கண்டித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்

நடிகர் சூர்யாவை கண்டித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினாா்கள்.

Update: 2021-11-14 20:32 GMT
பவானி
பிரபல தமிழ் சினிமா நடிகர் சூர்யா நடித்த திரைப்படம் சமீபத்தில் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது. இந்த படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நடிகர் சூர்யாவை கண்டித்தும் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் பவானியில் உள்ள அந்தியூர் பிரிவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் மனோகரன் தலைமை தாங்கினார். வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் திருமுருகன், பவானி ஒன்றியக்குழு துணைத்தலைவர் ராஜேந்திரன், மாவட்ட துணைத்தலைவர் சர்வேயர் வேலு, மாவட்ட துணை செயலாளர் ஆண்டவன், வக்கீல் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் எஸ்.சி.ஆர் கோபால் கலந்துகொண்டு கண்டன கோஷம் எழுப்பினார். 
இதில் ஒன்றிய செயலாளர்கள் பாலகிருஷ்ணன், நடராஜ், கண்ணன், பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர பொறுப்பாளர் பரணிதரன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்