பெருந்துறை வாரச்சந்தையில் ரூ.21 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை

பெருந்துறை வாரச்சந்தையில் ரூ.21 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை ஆனது.;

Update: 2021-11-14 20:20 GMT
பெருந்துறை
பெருந்துறை வாரச்சந்தையில் ரூ.21 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை ஆனது. 
வாரச்சந்தை
பெருந்துறை வாரச்சந்தை நேற்று வழக்கம்போல் நடைபெற்றது. 
இந்த சந்தைக்கு பெருந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், திருப்பூர் மாவட்டம் முத்தூரில் இருந்தும் வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. 
ரூ.21 லட்சம்
இதில் வெள்ளாடு ஒன்று ரூ.6 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்பனை ஆனது. செம்மறி    ஆடு        ஒன்று      ரூ.4 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. 
பெருந்துறை வாரச்சந்தையில் ஆடுகள் மொத்தம் ரூ.21 லட்சத்துக்கு விற்பனை ஆனதாக சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.  பெருந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் மற்றும் ஆடு வளர்ப்போர் இங்கு வந்து ஆடுகளை விலைபேசி பிடித்து சென்றனர். 

மேலும் செய்திகள்