பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
திசையன்விளை:
திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லிபி பால்ராஜ் மற்றும் போலீசார் நேற்று திசையன்விளை நவ்வலடி ரோடு பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது கமலா நகரில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடு பட்டு கொண்டிருந்த சங்கனாங்குளம் வடக்கு தெருவைச் சேர்ந்த சொக்கலிங்கம் (வயது 55), திசையன்விளை ஜேம்ஸ் தெருவைச் சேர்ந்த ஜெயக்குமார் (43), வடக்கு தெருவைச் சேர்ந்த கணேசன் (45), ராஜ பாண்டி (41) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.9,600 மற்றும் சீட்டு கட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.