தொடர் மழையால் ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது; விவசாயி குடும்பத்துடன் உயிர் தப்பினார்

தொடர் மழையின் காரணமாக ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில், விவசாயி தனது குடும்பத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

Update: 2021-11-14 18:39 GMT
குன்னம்,
சுவர் இடிந்து விழுந்தது
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியம், காடூர் ஊராட்சிக்குட்பட்ட நல்லறிக்கை கிராமம் வடக்கு காலனி தெருவை சேர்ந்தவர் கருப்பையா.  விவசாயியான இவருக்கு வனிதா என்ற மனைவியும், ஒரு மகளும், மகனும் உள்ளனர். கருப்பையா தனது குடும்பத்தினருடன் ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார். 
தற்போது பெய்து வரும் தொடர் மழையினால் நேற்று முன்தினம் இரவு கருப்பையாவின் ஓட்டு வீட்டின் ஒரு பக்க சுவர் திடீரென்று இடிந்து விழுந்தது. 
உயிர் தப்பினர்
வீட்டின் வெளிப்பக்கமாக சுவர் விழுந்ததால் கருப்பையாவின் குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 
மழையின் காரணாக ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததால் நிவாரண தொகை வழங்குமாறு கருப்பையா குடும்பத்தினர் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்