மதுக்கடையில் அரிவாளை காட்டி மதுபானம் திருடியவர் கைது

திருப்புல்லாணி அருகே மதுக்கடையில் அரிவாளை காட்டி மிரட்டி மதுபானம் திருடியவர் கைது செய்யப்பட்டார். மற்றொருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்்.

Update: 2021-11-14 18:37 GMT
ராமநாதபுரம்,

திருப்புல்லாணி அருகே மதுக்கடையில் அரிவாளை காட்டி மிரட்டி மதுபானம் திருடியவர் கைது செய்யப்பட்டார். மற்றொருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்்.

அரிவாளை காட்டி மிரட்டல்

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ளது சக்திபுரம். இந்த ஊரில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக்கடையில் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் 2 பேர் வந்து அரிவாளை காட்டி இலவசமாக மதுபானம் தருமாறு கேட்டுள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கடை விற்பனையாளர் துளசிராஜமூர்த்தி ஒரு பீர்பாட்டில் கொடுத்துள்ளார். 
இதனை பெற்றுக்கொண்டவர்கள் மேலும் மதுபானம் தருமாறு கேட்டுள்ளனர். அவர் தர மறுத்ததால் அவரையும், உடன் வேலை பார்க்கும் முருகேசன் என்பவரையும் கீழே தள்ளிவிட்டு அரிவாளை காட்டி கொலை செய்துவிடுவதாக மிரட்டி ரூ.1,800 மதிப்பிலான மதுபானங்களை திருடிச்சென்றுவிட்டனர். 

2 பேர் கைது

இதுகுறித்து விற்பனையாளர் துளசிராஜமூர்த்தி அளித்த புகாரின் அடிப்படையில் திருப்புல்லாணி போலீசார் வழக்குபதிவு செய்து வாலாந்தரவை அம்மன்கோவிலையைச் சேர்ந்த ராமு மகன் சத்தியநாதன் (வயது23) என்பவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ராமச்சந்திரன் மகன் கார்மேகம் (19) என்பவரை தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்