மதுரை,
மதுரை கிழக்குமாசி வீதியை சேர்ந்தவர் வீனன்சோப்ரா (வயது 32). இவர், அந்த பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கும், ஜலால் (22), முருகன் (23) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. சம்பவத்தன்று, வீனன் சோப்ரா ஜவுளிக்கடையில் இருந்தபோது அங்கு வந்த 2 பேரும், அவரை பீர்பாட்டிலால் சரமாரியாக தாக்கினர். இதுகுறித்த புகாரின் பேரில், விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜலால், முருகன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.