லாரியில் பேட்டரி திருட்டு

லாரியில் பேட்டரி திருட்டு

Update: 2021-11-14 18:04 GMT
திருமங்கலம், 
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் நந்தகோபால் (வயது 55). இவர் கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு பேட்டரிகளை ஏற்றிக் கொண்டு லாரியில் வந்து கொண்டிருந்தார். திருமங்கலம் செக்கானூரணி சாலையில் உள்ள டீக்கடையில் டீ குடிப்பதற்காக லாரியை நிறுத்தினார். அப்போது லாரியின் பின்புறத்தில் கட்டப்பட்டிருந்த தார்ப்பாய் கிழிந்து இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நந்தகோபால் லாரியின் உள்ளே பார்த்தபோது ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பேட்டரி திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர், திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்