விஷம் குடித்து கல்லூரி மாணவர் தற்கொலை
காரைக்குடி அருகே விஷம் குடித்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
காரைக்குடி,
போடியை சேர்ந்தவர் திருக்குமரன் (வயது 20).இவர் காரைக்குடி அருகே உள்ள ஒரு கல்லூரி விடுதியில் தங்கி முதலாமாண்டு படித்து வந்தார் .இவர் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். வேலைவாய்ப்பிற்காக இருமுறை ராணுவத்தில் சேர முயற்சி செய்தும் அதில் தேர்வு பெறவில்லை.அதன்பின் அவர் கல்லூரியில் சேர்ந்துள்ளார். தனது குடும்ப சூழ்நிலையை கருதி விரக்தி அடைந்த நிலையில் இருந்த அவர் தங்கியிருந்த விடுதியிலேயே விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனே அவரை சக மாணவர்கள் மீட்டு காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குன்றக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.