அரவக்குறிச்சி
பள்ளப்பட்டியில் கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கரூர் மாவட்ட நீதிமன்ற துணை நீதிபதி மோகன்ராம் தலைமை தாங்கி பேசுகையில், பொதுமக்கள் தங்களின் சட்ட உதவிகளுக்கு முழுக்க முழுக்க இலவசமாக வழக்கறிஞர்களை வைத்து வழக்காட முடியும், அனைத்து நலத்திட்ட உதவிகளையும் பெற முடியும் என்றார். இதில், மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் செல்வராஜ், முன்னாள் பேரூராட்சி தலைவர் முனவர்ஜான், மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க ஆலோசகர் பாப்புலர் அபுதாகீர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.