மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலி

மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலியானார்.

Update: 2021-11-14 17:40 GMT
உடையார்பாளையம்,
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் கீரைகாரத் தெருவை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 30), கூலிதொழிலாளி. இவருடைய மனைவி ஜெயந்தி (27). இவர்களுக்கு ராகவி (6) என்ற மகள் இருந்தாள்.
நேற்று முன்தினம் ராகவிக்கு மர்ம காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஜெயந்தி தனது மகளை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்து உள்ளார். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், ராகவி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து உடையார்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்