தம்பதியை தாக்கியவர் கைது

தம்பதியை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-11-14 17:38 GMT
கீழப்பழுவூர்,
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட கல்லக்குடி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவருடைய மனைவி தெய்வகண்ணி (வயது 35). இவர்களுக்கும், அதே கிராமத்தை சேர்ந்த தனபால் (42) என்பவரும் பாகப்பிரிவினை தொடர்பாக ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக போலீசில் புகார் அளிப்பதற்காக வெங்கடாசலம் தனது மனைவி தெய்வகண்ணியுடன் கீழப்பழுவூர் புறப்பட்டு சென்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த தனபால் புதிய பஸ் நிலையம் அருகே தெய்வகண்ணியை தகாத வார்த்தைகளால் திட்டி அவரை தாக்கியுள்ளார். இதனை தடுக்க முயன்ற வெங்கடாசலத்தையும் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த இருவரும் அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனபாலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்