ராணிப்பேட்டை மாவட்டத்தில் 21 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று நடந்த தடுப்பூசி முகாம்களில் 21 ஆயிரம் பேருக்கு செலுத்தப்பட்டது.

Update: 2021-11-14 17:15 GMT
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று நடந்த தடுப்பூசி முகாம்களில் 21 ஆயிரம் பேருக்கு செலுத்தப்பட்டது. 

21 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 8-வது கட்டமாக கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் மாவட்டம் முழுவதும் 1,000 மையங்களில் நடந்தது. பல்வேறு இடங்களில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
வீடு வீடாகச்சென்று அரசு பணியாளர்கள் தடுப்பு சிகிச்சை எடுத்துக் கொள்ளாதவர்கள் குறித்த விவரங்களை சேகரித்து தடுப்பூசி போடாதவர்களை முகாமுக்கு அழைத்து வந்து, தடுப்பூசி செலுத்தினர்.

 மாவட்டம் முழுவதும் 21 ஆயிரத்து‌ 76 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

 வாலாஜா

வாலாஜாவை அடுத்த வி.சி.மோட்டூர் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமினை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார். 
மேலும் தடுப்பூசி செலுத்திகொள்ள வந்தவர்களிடம் உங்கள் வீட்டில் மற்றும் அக்கம் பக்கத்தினர் தடுப்பூசி செலுத்தாமல் இருந்தால் அவர்களையும் அழைத்து வந்து தடுப்பூசி செலுத்த வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

 நெமிலி

 நெமிலி பேரூராட்சி சார்பில், நெமிலி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கரியாக்குடல் தொடக்கப்பள்ளி மற்றும் புன்னை நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடந்த கொரோனா தடுப்பூசில் முகாம்களில் 275 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. பனப்பாக்கம் பேரூராட்சி சார்பில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில் 244 பேருக்கு செலுத்தப்பட்டது.

 காவேரிப்பாக்கம்

காவேரிப்பாக்கம் பேருராட்சியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமினை கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது தடுப்பூசி செலுத்தி கொள்ள வருகை புரிந்தவர்களிடம் உங்கள் வீட்டில் மற்றும் அக்கம் பக்கத்தினர் தடுப்பூசி செலுத்தாமல் இருந்தால் அவர்களையும் அழைத்து வந்து தடுப்பூசி செலுத்த வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

 இதனையடுத்து வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணியினை கலெக்டர் ஆய்வு செய்தார். 
இந்த முகாமில் முதல் தவணை தடுப்பூசி 51 நபர்களுக்கும், இரண்டாம் தவனை தடுப்பூசி 121 பேருக்கும் என மொத்தம் 172 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இந்த ஆய்வின் போது பேரூராட்சி செயல் அலுவலர் மனோகரன், சுகாதர பணியாளர்கள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்