மது போதையில் கொக்கு மருந்து சாப்பிட்ட தொழிலாளி சாவு
மது போதையில் கொக்கு மருந்து சாப்பிட்ட தொழிலாளி சாவு;
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டையை அடுத்த அச்சமங்கலம் பழனி வட்டத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 40) கூலி தொழிலாளி. மது பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் குடித்து வந்துள்ளார். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சம்பவத்தன்று பெருமாள் மது போதையில் வீட்டில் இருந்த கொக்கு மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். வீட்டில் இருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவருடைய தந்தை கோபால் கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.