கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்;

Update: 2021-11-14 17:02 GMT
வீரபாண்டி,
திருப்பூரில் 7.52 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஆண்டிப்பாளையம் குளத்தை ஆக்கிரமித்து மேற்கொண்டு வரும் கட்டிட பணிகளை நிறுத்தக்கோரியும், திருப்பூர் மாநகராட்சியை கண்டித்தும் தமிழ்நாடு இளைஞர் கட்சி  சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆண்டிபாளையம் குளம் அருகே நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் குளத்தில் கட்டப்படும் கட்டிடத்தை உடனடியாக அகற்ற வேண்டும், என்றும் குளத்தினை பாதுகாக்க  வேண்டும் என்றும் பதாகைகள் ஏந்தி கோஷமிட்டனர்.
இதில் மாநில துணைத்தலைவர் காமேஷ், மாவட்ட துணைத்தலைவர்  அருண்குமார், மாவட்ட துணை செயலாளர் அந்தோணி மரியாஜ், தலைவர் விமல் ராஜா, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கட்சி சாராத விவசாய சங்கம்  ஈஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் மக்கள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் மக்கள் ஜனநாயக முன்னேற்றக்கழகத்தினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்