நிலத்தில் உழவு செய்த போது டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலி

நிலத்தில் உழவு செய்த போது டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலி கள்ளக்குறிச்சி அருகே பரிதாபம

Update: 2021-11-14 16:37 GMT
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே உலகங்காத்தான் கிராமத்தை சேர்ந்தவர் சிங்காரம்(வயது 71). விவசாயியான இவர் தனது மகனுக்கு சொந்தமான டிராக்டர் மூலம் தன்னுடைய வயலில் டிராக்டர் கலப்பை பகுதியில் பரம்பு மாட்டி சமன்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக டிராக்டரின் இரும்பு சக்கரம் சேற்றில் சிக்கிக்கொண்டது. உடனே சிங்காரம் டிராக்டரில் இருந்து இறங்கி கலப்பை பகுதியில் இருந்த பரம்பை கழற்றிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென டிராக்டர் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் டிராக்டருக்கு அடியில் சிக்கிய சிங்காரம் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்