மாடுகளுக்கு பரவும் காணை நோய்

தேவதானப்பட்டி பகுதியில் மாடுகளுக்கு காணை நோய் பரவி வருகிறது.

Update: 2021-11-14 16:31 GMT
தேவதானப்பட்டி: 

தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, காமக்காபட்டி, அம்சாபுரம், ஜெயமங்கலம் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் மாடுகளை அதிக அளவில் வளர்த்து வருகின்றனர். தேவதானப்பட்டி பகுதியில் மாடுகளுக்கு காணை நோய் பரவி வருகிறது. 

இதனால் மாடுகள் தீவனம் உண்ணாமல் பால் உற்பத்தி குறைந்து வருகிறது. பொதுவாக கோடை காலங்களில் காணை நோயால் மாடுகள் பாதிக்கப்படுவது வழக்கம்.

 ஆனால் தற்போது மழை காலத்தில் இந்த நோய் ஏற்பட்டுள்ளது. எனவே மாடுகளுக்கு பரவும் காணை நோயை தடுக்க மாவட்ட கால்நடை துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்