தொழிலாளி தற்கொலை

தேனியில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் தொழிலாளி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-11-14 16:09 GMT
தேனி: 

தேனி கருவேல்நாயக்கன்பட்டி வள்ளுவர் காலனியை சேர்ந்தவர் அருண்பாண்டி (வயது 32). கட்டுமான தொழிலாளி. இவருடைய மனைவி முத்துமீனா (25). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு குழந்தை இல்லை. குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருந்த அருண்பாண்டி நேற்று முன்தினம் அரளிவிதையை தின்று தற்கொலைக்கு முயன்றார். 

அவர் வாந்தி எடுப்பதை பார்த்த அக்கம் பக்கத்து உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து முத்துமீனா கொடுத்த புகாரின் பேரில் தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்