பொள்ளாச்சி வழியாக தென்மாவட்டங்களுக்கு ரெயில்
பொள்ளாச்சி வழியாக தென்மாவட்டங்களுக்கு ரெயில்
பொள்ளாச்சி,
கோவை ரெயில்நிலைய ஆய்வுக்கு வந்த ரெயில்வே வாரியத்தின் பயணிகள் சேவை குழுவிடம் பொள்ளாச்சி ரெயில் பயணிகள் சங்கம் (வார்ப்) கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திண்டுக்கல்லில் இருந்து பழனி, பொள்ளாச்சி, போத்தனூர் வரையிலான வழித்தடத்தில் அகலரெயில் பாதையாக மாற்றப்பட்டு கடந்த 2017-ம் ஆண்டு முதல் ரெயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. ஆனால் கோவையில் இருந்து திண்டுக்கல்லுக்கு நேரடி சேவை இல்லை. மேலும் கோவையில் இருந்து தென்மாவட்டங்களை இணைக்கும் வகையில் கோவை-ராமேசுவரம் இடையே தினLம் இரவுநேர எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க வேண்டும்.
கோவை-மதுரை இடையே இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், கோவை-தூத்துக்குடிக்கு தினமும் ரெயில், கோவை-திண்டுக்கல் தினமும் பயணிகள் ரெயில் ஆகிய ரெயில்களை பொள்ளாச்சி வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேற்கண்ட ரெயில்களை இயக்கினால் சுற்றுலா தலங்களான ஊட்டி, வால்பாறை, மூணாறு, கொடைக்கானல், மதுரை, தனுஷ்கோடி, குற்றாலம் அருவி ஆகிய பகுதிகளுக்கு எளிதில் செல்ல முடியும்.
மேலும் ஆன்மிக தலங்களான ஈஷா யோக மையம், மருதமலை முருகன் கோவில், ஆனைமலை மாசாணியம்மன் கோவில், உடுமலை திருமூர்த்தி மலை, பழனி முருகன் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், ராமேசுவரம் ஆகிய பகுதிகளுக்கு பக்தர்கள் எளிதில் செல்லலாம்.
மேலும் பொள்ளாச்சியில் இருந்து தென்னை நார் பொருட்களை ஏற்றுமதி மற்றும் பொள்ளாச்சி, ஒட்டன்சத்திரம், உடுமலை ஆகிய மார்க்கெட்களுக்கு காய்கறிகள், ராமேசுவரத்தில் இருந்து கடல்சார்ந்த பொருட்களை ரெயில்கள் மூலம் கொண்டு செல்ல முடியும். இதன் மூலம் ரெயில்வேக்கு கூடுதல்
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.