தூத்துககுடியில் பணம் கேட்டு தொழிலாளியை அரிவாளால் வெட்டிய 2பேர் கைது செய்யப்பட்டனர்

தூத்துககுடியில் பணம் கேட்டு தொழிலாளியை அரிவாளால் வெட்டிய 2பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2021-11-14 14:34 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி முனியசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் துரைராஜ் (வயது 48). தொழிலாளி. இவர் சம்பவத்தன்று இரவு தனது நண்பரான தூத்துக்குடி எஸ்.எஸ்.பிள்ளை தெருவைச் சேர்ந்த அருண் (43) என்பவருடன் தூத்துக்குடி 1-வது ரெயில்வே கேட் பகுதியில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த தூத்துக்குடி பூபாலராயபுரத்தைச் சேர்ந்த லூர்துசாமி மகன் ஜெர்விந்த் (22), தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த அசோக் மகன் பூபஸ்டன் (27) ஆகிய 2 பேரும் வழிமறித்து துரைராஜிடம் பணம் கேட்டு அரிவாளால் வெட்டினார்களாம்.
இதுகுறித்த புகாரின்பேரில், வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து ஜெர்விந்த், பூபஸ்டன் ஆகிய 2 பேரையும் கைது செய்தார். கைதான ஜெர்விந்த் மீது 12 வழக்குகளும், பூபஸ்டன் மீது 3 வழக்குகளும் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்