கோவில்பட்டியில் தீபத்திருவிழாவை முன்னிட்டு கார்த்திகை விளக்கு விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது
கோவில்பட்டியில் தீபத்திருவிழாவை முன்னிட்டு கார்த்திகை விளக்கு விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் தீபத்திருவிழாவை முன்னிட்டு கார்த்திகை விளக்கு விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. பெண்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
கார்த்திகை தீபதிருவிழா
கார்த்திகை தீபதிருவிழா இம்மாதம் 19-ந் தேதி நடக்கிறது. கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள கடைகளில் கார்த்திகை தீபங்கள் விதவிதமாக விற்பனைக்கு குவித்து வைக்கப் பட்டுள்ளது. பெண்கள் கார்த்திகை தீபங்களை ஆர்வமுடன் வாங்கிச் செல்கிறார்கள்.
இதுகுறித்து கார்த்திகை தீபம் விற்பனை செய்யும் கடைக்காரர் கடம்பூர் ஆசாத் கூறியதாவது:-
பருவமழை காலமாக இருப்பதால் கார்த்திகை தீபம் உற்பத்தி குறைந் துள்ளது. நாங்கள் மானாமதுரை, திண்டுக்கல், விருத்தாச்சலம், பாண்டிச்சேரி பகுதியிலிருந்து கார்த்திகை விளக்குகளை கொள்முதல் செய்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளோம்.
விலை விபரம்
உற்பத்தி குறைவு காரணமாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 20 சதவீதம் விலை கூடுதலாகி உள்ளது.
ஒரே அடி உயரமுள்ள மயில் வாகனத்தில் லட்சுமி விளக்கு ரூ300, மகாலட்சுமி 3- அடுக்கு விளக்கு ரூ 850, 7-அடுக்கு விநாயகர் விளக்கு ரூ 150, அன்ன விளக்கு ஜோடி ரூ 100, துளசி மாட விளக்கு ரூ 40, பெரிய அகல் விளக்கு ரூ 50, தேங்காய் விளக்கு ரூ 100, அணையா விளக்கு ரூ 70, இலையில் பிள்ளையார் விளக்கு ரூ 120, தாமரை விளக்கு ரூ 80, 5 சிறிய விளக்கு ரூ 10, மண் சிறிய விளக்கு ரூ 1.50 க்கு விற்பனை செய்கிறோம் என்றார்.