ஊரெல்லாம் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் இந்த ஆண்டாவது உடன்குடி அருகே வறண்டு கிடக்கும் தாங்கைகுளத்திற்குதண்ணீர் வருமா என்ற விவசாயிகள் ஏக்கப் பெருமூச்சு விட்டு வருகின்றனர்
ஊரெல்லாம் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் இந்த ஆண்டாவது உடன்குடி அருகே வறண்டு கிடக்கும் தாங்கைகுளத்திற்குதண்ணீர் வருமா என்ற விவசாயிகள் ஏக்கப் பெருமூச்சு விட்டு வருகின்றனர்
உடன்குடி:
ஊரெல்லாம் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் இந்த ஆண்டாவது உடன்குடி அருகே வறண்டு கிடக்கும் தாங்கைகுளத்திற்குதண்ணீர் வருமா? என்ற விவசாயிகள் ஏக்கப் பெருமூச்சு விட்டு வருகின்றனர்.
தாங்கைகுளம்
உடன்குடி அருகேயுள்ள தாங்கைகுளம் சுற்றுப்புற கிராமங்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு ஆதாரமாக விளங்கி வருகிறது. மேலும், இந் குளத்தில் தண்ணீர் தேங்கினால் மட்டுமே இப்பகுதி விவசாய விளை நிலங்களில் கடல் நீர் மட்டம் உயர்ந்து, நல்ல குடிநீர் எல்லாம் கசப்புத்தன்மை உள்ளநீராக மாறாமல் தடுக்க முடியும்.
கிணற்று நீரை நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு இந்த நீரை உவர்ப்பாக மாறாமல் பாதுகாக்கும் குளமாகவும் உள்ளது.
வறண்டு கிடக்கும் குளம்
சுமார் 100 ஏக்கர் பரப்புள்ள இக்குளத்திற்கு அருகில் உள்ள சடையநேரிகுளத்தில் இருந்து தண்ணீர் வரும். சடையன்நேரி குளம் நிறைந்து மறுகால் பாய்ந்தால்தான் இக்குளத்தில் தண்ணீர் தேங்கும். சடையன்நேரிகுளம் முழுமையாக நிரம்புவதற்கு இன்னும் 10 நாட்களுக்கு மேல் என கூறப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்கள் தொடர் கனமழை காரணமாக வெள்ளக்காடாக காட்சி அளித்தபோதும், இக்குளத்துக்கு தண்ணீர் வரத்து இல்லாமல் வறண்டு கிடக்கிறது.
வீணாகும் ஆற்று தண்ணீர்
தற்போது தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஸ்ரீவைகுண்டம் அணையை கடந்த வினாடிக்கு 19 ஆயிரம் கன அடி தண்ணீர் வீணாக வெளிேயறி கடலில் கலந்து வருகிறது. இந்த தண்ணீரை ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து இப்பகுதிக்கு திருப்பி விட்டு, இந்த குளத்துக்கு தண்ணீர் கிடைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.