உடன்குடி வட்டார பகுதியில் தென்னை, முருங்கை விவசாயத்தில் விவசாயிகள் தீவிரம் காட்டிவருகின்றனர்
உடன்குடி வட்டார பகுதியில் தென்னை, முருங்கை விவசாயத்தில் விவசாயிகள் தீவிரம் காட்டிவருகின்றனர்;
உடன்குடி வட்டாரப் பகுதியான உடன்குடி, பரமன்குறிச்சி, மெஞ்ஞானபுரம், குலசேகரன்பட்டினம், தண்டுபத்து, தாண்டவன்காடு, மாதவன்குறிச்சி, உட்பட 18 பஞ்சாயத்து பகுதியில் கடந்த 10 நாட்களாக மழை விட்டுவிட்டு தொடர்ந்து பெய்து வருகிறது. இப்பகுதியில் விவசாயம் செய்ய கால்வாய் பாசனமோ, குளத்து பாசனமோ இல்லாததால் முழுக்க கிணற்றுப் பாசனத்தை நம்பியே விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது பருவமழை பெய்து வருவதால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தென்னை மற்றும் முருங்கை விவசாயத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.