சைக்கிள் மீது கன்டெய்னர் லாரி மோதி முதியவர் சாவு

சைக்கிள் மீது கன்டெய்னர் லாரி மோதி முதியவர் பரிதாபமாக இறந்து போனார்.

Update: 2021-11-14 13:13 GMT
திருவள்ளூரை அடுத்த ஈக்காடு ரெட்ஹில்ஸ் புரத்தை சேர்ந்தவர் மாணிக்கராஜ் (வயது 68). இந்தநிலையில் நேற்று முன்தினம் மாணிக்கராஜ் தனது சைக்கிளில் திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் திருவள்ளூர் நோக்கி வேகமாக வந்த சரக்கு லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக சைக்கிள் மீது மோதியது. இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த அவருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.

இந்த விபத்தை கண்ட அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் காயமடைந்த மாணிக்கராஜை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்து போனார்.

சம்பவம் குறித்து புல்லரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய லாரி டிரைவர் யார்? என விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்