செண்பகத்தோப்பு அணையில் இருந்து 7359 கன அடி நீர் வெளியேற்றம்

செண்பகத்தோப்பு அணையில் இருந்து 7359 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Update: 2021-11-14 12:43 GMT
கண்ணமங்கலம்

செண்பகத்தோப்பு அணையில் இருந்து 7359 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

ஜவ்வாதுமலை தொடரில் உற்பத்தியாகும் கண்ணமங்கலம் நாகநதி மற்றும் படவேடு கமண்டல நதியில் வெள்ளம் ஓடுகிறது. 

இந்த நிலையில் படவேடு செண்பகத்தோப்பு அணையில் இருந்து வினாடிக்கு 7,395 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. 

இதனால் கமண்டல நதியில் அதிக அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இதேபோல் கண்ணமங்கலம் வழியாக ஓடும் நாகநதியிலும் இன்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

இதனை ஏராளமான பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர். மேலும் கண்ணமங்கலம் நாகநதி மேம்பாலம் அருகே பள்ளத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலை மழைநீர் சூழ்ந்தது.  

தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக வெளியேற்ற கண்ணமங்கலம் பேரூராட்சி நிர்வாகம் வடிகால் வசதி செய்துதர வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்