தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்
தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் நயினார். இவருடைய மகன் வன்னியப்பன் (வயது 38). சம்பவத்தன்று இவர் தூத்துக்குடி தலைமை தபால் அலுவலகம் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றாராம். சிறிது நேரம் கழித்து வந்த பேது, யாரோ மர்ம நபர் அந்த மோட்டார் சைக்கிளை திருடி சென்று விட்டாராம்.
இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தென்காசி மாவட்டம் வெள்ளக்கால் பகுதியைச் சேர்ந்த மூக்கையா மகன் மந்திரிகுமார் (32) மற்றும் ஒரு சிறுவன் சேர்ந்து வன்னியப்பனின் மோட்டார் சைக்கிளை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் மந்திரிகுமார் உள்பட 2 பேரையும் கைது செய்தனர்.