தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி

Update: 2021-11-13 22:41 GMT
மின் விளக்கு அமைக்கப்பட்டது
வில்லுக்குறி பஞ்சாயத்துக்கு உட்பட்ட திருவிடைக்கோடு சாய் தெருவில் மின்கம்பங்களில் விளக்குகள் பழுதடைந்து எரியாமல் இருந்து. இதுபற்றி 'தினந்தந்தி' புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து மின்வாரிய ஊழியர் புதிய விளக்கு அமைத்து எரிய வைத்தனர். நடவடிக்கை எடுத்த மின்வாரிய துறையினரையும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'-க்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
குளம்போல் தேங்கிய தண்ணீர்
பள்ளவிளை வசந்தம் நகர்பகுதியில் சாலையில் வடிகால் ஓடை இல்லாததால் மழைநீர் தேங்கி சாலையில் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வடிகால் வசதி அமைத்து தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.  
 -குமாரசுவாமி, வசந்தம் நகர்.
எரியாத விளக்கு
நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கூடுதல் கட்டிடத்தில் நோயாளிகளுக்கு போதுமான கழிப்பறை அமைக்கப்படாமல் உள்ளது. மேலும், கழிவறைகளில் இரவு நேரம் மின்விளக்குகள் சரியாக எரிவது இல்லை. இதனால், நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, நோயாளிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போதுமான கழிவறைகள் அமைத்து மின்விளக்கு எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                        -அசோக்குமார், சரலூர். 
சுகாதார சீர்கேடு
கன்னியாகுமரியில் பெரியநாயகி தெரு உள்ளது. இந்த தெருவில்  உள்ள வீடுகளில் முறையாக குப்பைகள் சேகரிக்கப்படுவதில்லை. இதனால், அப்பகுதி குப்பைகள் கடலோரத்தில் கொட்டப்படுகிறது. இதன்காரணமாக கடல் மாசுபடுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெரியநாயகி தெருவில் குப்பைகள் சேகரிக்கவும், கடற்கரை பகுதியில் குப்பைகளை கொட்டுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
                                   -தேவசகாயம், கன்னியாகுமரி.
சாலை சீரமைக்கப்படுமா?
வெட்டூர்ணிமடம் பரமார்த்தலிங்கபுரத்தில் இருந்து கட்டையன்விளை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் தற்போது பெய்த மழையால் சாலையில் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
  -கார்த்திக், வெட்டூர்ணிமடம்.
பல்லாங்குழி சாலை
திருவனந்தபுரம்-நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில் தக்கலையில் இருந்து நாகர்கோவில் செல்லும் சாலை  பல இடங்களில் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாவதுடன், விபத்தில் சிக்கி உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
   -சுனில்குமார், கருங்கல். 
மின்கம்பத்தை மாற்ற வேண்டும்
தேரேகால்புதூர் நாஞ்சில் நகர் தெற்கு 3-வது தெருவில் உள்ள ஒரு மின்கம்பத்தின் சிெமண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்த வண்ணம் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் கம்பம் முறிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இதனால், அந்த வழியில் பொதுமக்கள் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே, விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்கம்பத்தை மாற்ற நடவடிக்ைக எடுக்க வேண்டும். 
                            -எஸ்.மனோகரன், நாஞ்சில்நகர் தெற்கு.




மேலும் செய்திகள்