வேப்பமரத்தில் தழை வெட்டிய தகராறில் இருதரப்பினர் மோதல்

வேப்பமரத்தில் தழை வெட்டிய தகராறில் இருதரப்பினர் மோதிக்கொண்டனர்.

Update: 2021-11-13 19:58 GMT
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள தெற்கு நரியங்குழி கிராமம் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் சாமிதுரை(வயது 53). அதே பகுதியைச் சேர்ந்தவர் ராஜலிங்கம்(55). விவசாயியான இவர்கள் 2 பேருக்கும் இடையே நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று 2 பேருக்கும் பொதுவான வேப்ப மரத்தில் ராஜலிங்கம் தழை வெட்டியதாக தெரிகிறது. அப்போது சாமிதுரை, அந்த மரத்தில் தழை வெட்டக்கூடாது என்று கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ராஜலிங்கத்தின் மனைவி வளர்மதி, மகன் ராஜ்குமார் மற்றும் சாமிதுரையின் மகன் சின்னதுரை, உறவினர் பழனிச்சாமி ஆகியோர் அங்கு வந்துள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு முற்றி, ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசில் ராஜலிங்கம் மற்றும் சாமிதுரை ஆகியோர் தனித்தனியே கொடுத்த புகாரின் பேரில் ராஜலிங்கம், வளர்மதி, ராஜ்குமார், சாமிதுரை, சின்னதுரை, பழனிச்சாமி ஆகிய 6 பேர் மீது விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்