பொதுமக்கள் சாலை மறியல்

பொதுமக்கள் சாலை மறியல்;

Update: 2021-11-13 19:37 GMT
மணப்பாறை, நவ.14-
மணப்பாறை நகராட்சி சிதம்பரத்தான்பட்டி பகுதியில் மழைநீர் தேங்கி கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் எந்தபலனும் இல்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் திண்டுக்கல் சாலை ரெயில்வே மேம்பாலம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். மணப்பாறை பகுதிக்கு ஆய்வு மேற்கொள்ள வந்த கலெக்டர் உள்பட யாரும் வராமல் புறக்கணித்து விட்டதாக குற்றம் சாட்டினர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய தீர்வு காண வழிவகை செய்யப்படும் என்று கூறியதை அடுத்து மக்கள் மறியலை கைவிட்டனர்.

மேலும் செய்திகள்