வென்னிமலை முருகன் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா
பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடந்தது.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் நேற்று குருப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு தட்சணாமூர்த்தி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு விநாயகர் பூஜை, புண்ணியாவாசனம், கும்ப பூஜை, நவக்கிரக பூஜை, கும்ப ஜெபம், குரு பகவான் மூல மந்திரம் ஜெபம், ஹோமம், பூர்ணாகுதி, குரு பகவானுக்கு அனைத்து திரவியங்களால் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் கீழப்பாவூரில் லட்சுமி நரசிம்மர் பீடத்தில் குருப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.