பீடிக்கடையை பெண்கள் முற்றுகை
சுரண்டை அருகே பீடிக்கடையை பெண்கள் முற்றுகையிட்டனர்.;
சுரண்டை:
சுரண்டை அருகே ஒரு கிராமத்தில் தனியார் பீடிக்கடை உள்ளது. இங்கு வழங்கப்படும் பீடிஇலை, தூள் தரம் குறைவாகவும், எடை குறைவாகவும் உள்ளதாக பீடி சுற்றும் பெண்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலையில் திடீரென பீடிக்கடை முன்பாக தரமான பீடி இலை வழங்கக்கோரி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டனர். இதனைத்தொடர்ந்து நிர்வாகத்தின் சார்பில், தரமான பீடி இலை மற்றும் தூள் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து பெண்கள் கலைந்து சென்றனர்.