நகைக்காக மூதாட்டி கழுத்தை நெரித்து கொலை; குற்றவாளிகளின் வீடுகளை சூறையாடிய உறவினர்கள்

நச்சலூர் அருகே நகைக்காக மூதாட்டி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதால் ஆத்திரம் அடைந்த அவரது உறவினர்கள் கொலை குற்றவாளிகளின் வீடுகளை சூறையாடினர்.;

Update: 2021-11-13 19:12 GMT
நச்சலூர், 
மூதாட்டி கொலை
நச்சலூர் அருகே உள்ள முதலைப்பட்டி, கீழமேடு பகுதியை சேர்ந்தவர் அய்யர். இவருடைய மனைவி அண்ணாச்சி (வயது 76). இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த சங்கிலி மனைவி சத்யா (38), 10-ம் வகுப்பு படிக்கும் அவரது மகன் ஆகியோர் நகைக்காக மூதாட்டி அண்ணாச்சியை கழுத்தை நெரித்து கொலை செய்தனர்.பின்னர் அதே பகுதியை சேர்ந்த முருகானந்தம் (33) என்பவரின் உதவியோடு மூதாட்டியின் உடலை  சாக்குமூட்டையில் கட்டி காவிரி ஆற்றில் வீசினர்.
வீடுகளை சூறையாடிய உறவினர்கள்
இந்த சம்பவம் தொடர்பாக அவர்கள் 3 பேரையும் குளித்தலை போலீசார் கைது செய்தனர். மேலும் மூதாட்டியின் உடல் 19 நாட்களுக்கு பிறகு காவிரி ஆற்றில் இருந்து போலீசார் நேற்று முன்தினம் மீட்டனர். இதனால் மூதாட்டியின் உறவினர்கள் ஆத்திரமடைந்து சத்யா மற்றும் முருகானந்தம் ஆகியோரின் வீடுகளை அடித்து நொறுக்கி சூறையாடினர். 
இதில் வீட்டு உபயோக பொருட்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. 
போலீசார் விசாரணை
இந்த சம்பவம் குறித்து முதலைப்பட்டி கிராம நிர்வாக அதிகாரி பழனிவேல் ராஜன், குளித்தலை போலீசில் புகார் கொடுத்தார். இதன்பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்