பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி
விருதுநகரில் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி நடைபெற்றது.
விருதுநகர்,
அனைத்திந்திய கூட்டுறவு 68-வது வார விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி விருதுநகரில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் நடைபெற்றது. இந்திய பொருளாதாரத்தில் கூட்டுறவின் பங்கு மற்றும் வெண்மை புரட்சிக்கு, பசுமை புரட்சிக்கு வித்திட்ட கூட்டுறவு ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடைபெற்றன. கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் செந்தில்குமார் தலைமையில் போட்டிகள் நடைபெற்றன. நடுவர்களாக மாரியப்பன், ராமகிருஷ்ணன், காந்திராஜன், மீனாட்சி ஆகியோர் இருந்தனர். இப்போட்டிகளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவ, மாணவிகள் 80-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.