அனுமதியின்றி மணல் அள்ளிய 2 பேர் கைது

அனுமதியின்றி மணல் அள்ளிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-11-13 18:54 GMT
காரியாபட்டி, 
காரியாபட்டி அருகே ஏ.நெடுங்குளம் கிராம நிர்வாக அதிகாரி அழகர் மற்றும் தலையாரி ஆகியோர் ஏ.நெடுங்குளம் ஆற்றுப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதி வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த வேனில் சாக்குகளில் மணல் இருப்பது தெரியவந்தது. அப்போது அவர்களிடம் விசாரணை செய்தபோது ஏ.நெடுங்குளம் ஆற்றுப் பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்ததும், அருண்பாண்டி (வயது27), முத்துசாமி (35) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த வேனை  பறிமுதல் செய்த கிராம நிர்வாக அதிகாரி அழகர் காரியாபட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் காரியாபட்டி போலீசார் அவர்கள் 2 பேரை கைது செய்தனர். 

மேலும் செய்திகள்