அன்னவாசல் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; தாய் பலி மகன் படுகாயம்

அன்னவாசல் அருகேஅன்னவாசல் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தாய் பலியானார். மகன் படுகாயமடைந்தார்.

Update: 2021-11-13 18:28 GMT
அன்னவாசல்:
தாய் பலி
அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டியை சேர்ந்தவர் நசிர் அகமது. இவரது மனைவி யாஸ்மின்பேகம் (வயது 49). இவரது மகன் முகமதுசலீம் (28). இவர்கள் இருவரும் அன்னவாசல் இருந்து முக்கண்ணாமலைப்பட்டிக்கு ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை முகமதுசலீம் ஓட்டினார். செங்கப்பட்டி என்னும் இடத்தில் வந்தபோது எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக கூறப்படுகிறது. 
இதில் மோட்டார் சைக்கிளின் பின்புறம் அமைந்திருந்த யாஸ்மின்பேகம் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். முகமது சலீம் படுகாயமடைந்தார். இதனையடுத்து அவ்வழியாக சென்றவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அன்னவாசல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி யாஸ்மின் பேகம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் மலைக்குடிப்பட்டி அருகே உள்ள கல்லிடைக்கண்பட்டியை சேர்ந்த திருப்பதி (27) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்