மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆர்வமுடன் விண்ணப்பித்த இளைஞர், இளம்பெண்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இளைஞர், இளம்பெண்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர்.;

Update: 2021-11-13 18:15 GMT
அறந்தாங்கி:
சிறப்பு முகாம்
தமிழகத்தில் கடந்த 1-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் மேற்கொள்ள சிறப்பு முகாம் 13, 14, 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று 942 இடங்களில் 1,559 சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. இதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இளைஞர், இளம்பெண்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர். 
இதேபோல பட்டியலில் பெயர்களை நீக்க மற்றும் திருத்தம் மேற்கொள்ளவும் படிவங்களை பூர்த்தி செய்து பொதுமக்கள் கொடுத்தனர். அறந்தாங்கியில் டி.இ.எல்.சி. பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமில் இளம்பெண்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர்.
கலெக்டர் ஆய்வு
புதுக்கோட்டையில் பிரகதாம்பாள் மேல்நிலைப்பள்ளியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் தொடர்பான சிறப்பு முகாமை கலெக்டர் கவிதாராமு ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்ற படிவங்கள் மற்றும் பதிவேடுகளை பார்வையிட்டார். தொடர்ந்து அவர் கூறுகையில், ‘‘மாவட்டத்தில் நாளையும் (அதாவது இன்று) 942 இடங்களில், 1,559 சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
இதேபோல் 27, 28 ஆகிய தேதிகளில் இதுபோன்ற சிறப்பு முகாம்கள் நடைபெறும். புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி புதிய வாக்காளர்களாக பதிவுசெய்தல், பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல் போன்ற பணிகளை மேற்கொள்ளலாம்’’ என்றார். இந்த ஆய்வின்போது தாசில்தார் செந்தில்குமார், துணை தாசில்தார்கள் கவியரசு, செந்தில் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
காரையூர்
பொன்னமராவதி தாலுகா காரையூர் பகுதிக்கு உட்பட்ட ஒலியமங்கலம், மேலத்தானியம், இடையாத்தூர், சடையம்பட்டி, நல்லூர், அரசமலை உள்பட பல்வேறு பகுதிகளில் அனைத்து வாக்குச்சாவடி நிலையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற்றது.  சிறப்பு முகாம்களை பொன்னமராவதி தேர்தல் தனித்துணை தாசில்தார் சேகர் மற்றும் வாக்குச்சாவடி மேற்பார்வையாளர்கள் ஆய்வு செய்தனர்.
பொன்னமராவதி
பொன்னமராவதி ஒன்றியம் கண்டியாநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் புதிய வாக்காளர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்