2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
வாணியம்பாடி ெரயில் நிலையத்தில் 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
வாணியம்பாடி
வாணியம்பாடி ெரயில் நிலையத்தில் 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கர்நாடக மாநிலத்திற்கும், ஆந்திர மாநிலத்திற்கும் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவின் பேரில் வருவாய்த் துறையினர், காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், வாணியம்பாடியில் இருந்து வெளி மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்துவதாக புகார் வந்தது. இதையடுத்து வாணியம்பாடி தாசில்தார் மோகன் தலைமையிலான வருவாய்த்துறையினர் ெரயில் நிலையத்திற்கு சென்று சோதனை செய்தனர்.
அப்போது துணி மூட்டைகளை எடுத்து செல்வது போல் 53 மூட்டைகளில் 2 டன் ரேஷன் அரிசி கர்நாடக மாநிலம் பங்காருபேட்டைக்கு, கடத்த பதுக்கி வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 2 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் வருவாய்த்துறையினர் அங்கு வருவதை அறிந்த ரேஷன் அரிசி கடத்தல் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இச்சம்பவம் குறித்து ெரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.