மழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து மூதாட்டி சாவு

மழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து மூதாட்டி சாவு

Update: 2021-11-13 17:47 GMT
ஆற்காடு

வாலாஜா தாலுகா மேல்விஷாரம் மிஷன் ஸ்கூல் 2-வது தெருவைச் சேர்ந்தவர் ஞானமணி (வயது 72). 

இவர் நேற்று  இரவு சாப்பிட்டு விட்டு தனது ஓட்டு வீட்டில் படுத்துத் தூங்கினார். அப்போது தொடர் மழையால் அவரின் வீட்டின் மேல் கூரை திடீரென இடிந்து விழுந்தது. 

அதில் பலத்த காயம் அடைந்த மூதாட்டி ஞானமணியை குடும்பத்தினர் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். 

அவரின் உடலுக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேரில் சென்று மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். 

அப்போது ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, வாலாஜா தாசில்தார் ஆனந்தன் உள்பட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்