ஆன்லைன் முறையில் தேர்வு நடத்த கோரி கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
ஆன்லைன் முறையில் தேர்வு நடத்த கோரி கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்;
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் அனைத்து மாணவர் முன்னேற்ற அமைப்பு சார்பில் இன்று மாவட்டத்திலுள்ள பல்வேறு கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை அண்ணா நுழைவாயில் அருகில் இருந்து மாணவர்கள் ஊர்வலமாக சென்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தமிழகத்தில் ஆன்லைன் முறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்தி விட்டு நேரடித் தேர்வு வைப்பது எப்படி என்றும், ஆன்லைன் மூலம் பாடம் நடத்தினால் ஆன்லைன் முறையில் தான் தேர்வு நடத்த வேண்டும் என்றும் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தில் உள்ள சுமார் 12 கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி மனு ஒன்றை கலெக்டர் முருகேஷை நேரில் சந்தித்து வழங்கினர்.