கூந்தலுடைய அய்யனார் கோவிலில் ஐப்பசி மாத வழிபாடு
எஸ்.வி.மங்கலத்தில் உள்ள கூந்தலுடைய அய்யனார் கோவிலில் ஐப்பசி மாத வழிபாடு நடந்தது.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி அருகே எஸ்.வி.மங்கலத்தில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கூந்தலுடைய அய்யனார் பூரணை தேவி, புஷ்கலை தேவி கோவில் உள்ளது. இங்கு ஐப்பசி மாத சிறப்பு வழிபாடு நடைபெற்றது. குலாலர் வம்சாவளியை சேர்ந்த வடக்கு கரை ஆண் வாரிசுதாரர்களால் இந்த பூஜை நடைபெற்றது. முன்னதாக கோவில் பூசாரிகள், கூந்தலுடைய அய்யனார், பூரணை தேவி புஷ்கலா தேவி மற்றும் பத்ரகாளி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், பழம், பன்னீர், புஷ்பம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 21 வகையான திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்தனர்.அதனை தொடர்ந்து கூந்தலுடைய அய்யனாருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கோவில் பிரகாரத்தில் உள்ள பத்ரகாளி அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து வழிபட்டனர்.
---------