கொடைக்கானல் அருகே மலைப்பகுதியில் தோன்றிய நீர்வீழ்ச்சி சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்

கொடைக்கானல் அருகே மலைப்பகுதியில் தோன்றிய நீர்வீழ்ச்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.

Update: 2021-11-13 16:45 GMT
கொடைக்கானல்:
 கொடைக்கானல் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்தது. இதனிடையே கடந்த 3 நாட்களாக மழை குறைந்து உள்ளது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பகல் நேரத்தில் மேக மூட்டமாக உள்ளது. இதனால் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு இருந்தது. இதன் காரணமாக பகல் நேரத்திலேயே அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே சென்றன. மேக மூட்டங்கள் தரையிறங்கியதன் காரணமாக சுற்றுலா இடங்களை காண முடியாமல் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டனர் மேலும் பகல் நேரத்தில் கடும் குளிர் நிலவியது. இதனால் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது. 
இந்நிலையில் நேற்று பிற்பகல் 1 மணி முதல் சுமார் அரை மணி நேரம் நகரின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. கொடைக்கானல் அருகே பூம்பாறை, கூக்கால் ஆகிய கிராம பகுதிகளில் மலைப்பகுதியில் மழைநீரால் புதிய நீர்வீழ்ச்சிகள் தோன்றியது. இதனை சுற்றுலா பயணிகள் ரசித்து மகிழ்ந்து புகைப்படங்கள் எடுத்தனர். இதனிடையே வார விடுமுறை தினமான நேற்று பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை ஓரளவு இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்