சமூக தணிக்கை கிராம சபை கூட்டம்

கண்டதேவி ஊராட்சியில் சமூக தணிக்கை கிராம சபை கூட்டம் நடந்தது.

Update: 2021-11-13 16:43 GMT
தேவகோட்டை,
'
தேவகோட்டை ஊராட்சி ஒன்றியம் கண்டதேவி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 2019-20 - ஆம் நிதி ஆண்டிற்கான சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.இதில் கண்டதேவி ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர வல்லி முருகன் தலைமை தாங்கினார். சமூக தணிக்கை அலுவலர் முத்துபாண்டி திட்டம் குறித்து விளக்கினார்.தேவகோட்டை ஒன்றிய பணி மேற்பார்வையாளர் பாரதி கலந்து கொண்டார்.ஊராட்சி செயலாளர் தமிழரசன் நன்றி கூறினார்.இதில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்